கைதியின் மலவாயிலில் இருந்து ஹெரோயின், சிம் கார்ட் மீட்பு!
மத்திய மாகாண கல்வித் திணைக்கள முன்னாள் கணக்காய்வாளர் லலித் அம்பன்வல மீது அசிட் வீசிய குற்றச்சாட்டில் பதுளை சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஒருவரிடமிருந்து ஹெரோயின் மற்றும் சிம் கார்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
அநுராதபுரம் நீதிமன்றில் விசாரிக்கப்படும் வழக்கு ஒன்றிற்காக குறித்த நபர் பதுளை சிறையில் இருந்து அநுராதபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர் 25000 ரூபா பணத்தை மறைத்து வைத்திருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவரை சோதனைக்கு உட்படுத்திய அதிகாரிகள் அவரது மலவாயிலில் மர்மம் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சந்தேகித்தனர்.
பின்னர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதனை செய்தபோது 12 பைக்கற் ஹெரோயின் மற்றும் 5 சிம் கார்டுகள் அவரது மலவாயிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் சிறை அதிகாரி துசித உடவர தெரிவித்தார்.
0 comments :
Post a Comment