Friday, November 15, 2013

மொழி உரிமைகளை கடைப்பிடிப்பதாக வாசுதேவநாணயக்காரவை பாராட்டி நவிப்பிள்ளை கடிதம்

மக்களின் மொழி உரிமைகள் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மனப் பூர்வமான ஈடுபாட்டை பாராட்டி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையானர் நவநீதம்பிள்ளே அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 திகதியிட்ட கடிதத்தில் மும்மொழிகளிலும் தேசிய கீதத்தை பாடும் அமைச்சரின் முன் மொழிவுக்கான தனது ஆதரவை, நவநீதம்பிள்ளே தெரிவித்துள்ளார் 'மொழி தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை செயற்படுத்துவதில் தங்கள் பிரத்தியேக முன்னெடுப்புகளையும் மனப்பூர்வமான செயல்களையும் நான் பாராட்டுகிறேன்.

மும்மொழிகளிலும் தேசிய கீதத்தை பாடும் தங்கள் முன்மொழிவை நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆதரிக்குமென நான் நம்புகின்றேன். இது நல்லெண்ணத்தின் அடையானமாக இருக்குமென நான் நம்புகின்றேன்' என அவர் கூறியுள்ளர்.

காழ்ப்புணர்ச்சியை தூண்டுதல் தொடர்பில் சட்டங்கள் ஆக்கப்பட வேண்டுமெனும் அமைச்சரின் அறிவிப்பை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வரவேற்றுள்ளார்.

சிறுபான்மையினர் விவகார ஐ.நாவின் சுயாதீன நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு ஆணையாளர் தனது ஆதரவை உறுதியளித்துள்ளார்.

இது ஒரு நீண்டகால வேண்டுகோள் என அவர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com