நாங்கள் பயன்படுத்தும் வீடுகளுக்கு வாடகை செலுத்துகின்றோம்! பருத்தித்துறையில் வீடுகள் காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு!
தமிழ் மக்களின் காணிகள் மற்றும் வீடுகளை கடந்த காலத் தில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக, பருத்தித்துறை இராணுவத் தினர் தங்கள் வசம் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது எனவும், யாழில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த பொதுமக்களின் வீடுகளுக்கு இராணுவத்தினரால் வாடகை செலுத்தப்பட்டு வருவதுடன், இவ்வாண்டு ஜனவரி முதல் இன்று வரையும் வழங்கப்படாத வாடகைப் கட்டணங்கள விரைவில் வழங்கப்படுமென 521 ஆவது படைப்பிரிவின் கேணல் டி.டிம்.ரி.பி. திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் தற்போது யுத்தம் முடிவடைந்தமையால் அக்காணி வீடுகளை கைய ளிக்க வேண்டிய தருணம் ஏற்பட்ட நிலையில், வீடுகள் காணிகள் கையளிக்கப் படுகின்றது எனவும், நீண்டகால முரண்பாடுகளின் பின்னர் நிலவும் சமாதானமும் சுபீட்சமும் இராணுவத்தினரதும் பொதுமக்களினதும் உழைப்பினால் கிடைத்துள் ளது. அந்த சமாதானத்தினையும், ஒற்றுமையையும் நிலைநிறுத்த மிகுந்த ஆர்வத்துடன் நாங்கள் இருக்கின்றோம் எனவும் திசாநாயக்க தெரிவித்தார்.
யாழ். பருத்தித்துறை பகுதியில் 521 படைத்தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த வீடுகள் மற்றும் காணிகள் சனிக்கிழமை பொதுமக்களின் கையளிக்கப்பட்டன. 521ஆவது படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பாதுகாப்பு படைப் பிரிவின் 7ஆவது படைப்பிரிவினால் நேற்றுக்காலைஇந்த கையளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
521ஆவது படைப்பிரிவின் கேணல் டி.எம்.ரி.பி டிசாநாயக்க வீடுகள் மற்றும் காணிகள் கையளிப்பதற்கான அத்தாட்சி ஆவணத்தினை பருத்தித்துறை பிரதேச செயலர் ஆர்.ரி.ஜெயசீலனிடம் கையளித்தார். அதனைத்தொடர்ந்து, இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருந்த வீதியும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment