Tuesday, November 5, 2013

செவ்வாயில் மனிதர்கள் வாழும் சாத்தியம் உண்டா என்பதை ஆராயும் விண்கலம் சற்றுமுன் தனது பயணத்தை ஆரம்பித்தது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து விவரங்களை அனுப்ப உள்ள மங்கல்யான் விண்கலம் ஸ்ரீஹரிக் கோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து தமது பயணத்தை சற்று முன்னர் தொடங்கியது.

பி எஸ் எல் வி சி 25 எனும் ஏவுகணை மூலம் செலுத்தப்பட்ட மங்கல்யான் விண்கலம் திட்டமிட்டபடி, தமது 3 வது கட்டத்தை கடந்து 4 வது கட்டத்துக்கு பயணித்துக் கொண்டு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.

17 நிமிடத்தில் 60 ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து பூமியின் நீள் வட்டப் பாதையான துருவ பாதையில் நிலை நிறுத்தத் வேண்டும் என்பதே முதல் கட்டத்திட்டமாக இருந்தது. அதன்படி திட்டமிட்ட பாதையில் மங்கல்யான் பயணிக்கிறதா என்பதை கண்காணிக்க அங்கங்கு கண்காணிப்பு கப்பல்கள் நிறுத்தப் பட்டுள்ளன என்றும் அவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கும் இந்த செயற்கை கோள் இன்னும் 9 மாதங்களில் (300 நாட்களின் பின்னர்) செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என்றும் தெரிய வருகிறது.

இதுடன் செவ்வாய் கிரகத்தை நோக்கி புறப்பட்ட நான்காவது விண்கலமாக இந்திய விண்வெளி மையத்தின் மங்கல்யான் சாதனை படைத்துள்ளது.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன செவ்வாய்க்கிரகத்தை நோக்கிய தமது விண்வெளி திட்டங்களை வெற்றிகரமாக நடத்தியிருந்ததுடன் எனினும் உலக நாடுகள் செவ்வாயை நோக்கி செல்ல முன்னெடுத்த 40 விண்வெளித் திட்டங்களில் 23 தோல்வியில் முடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாங்கள் யாருடனும் போட்டிபோடவில்லை உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் எங்களுடனேயே போட்டியிடுகிறோம் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment