யாருக்காகவும் கடுகதி வீதியின் திட்டங்களை மாற்ற அரசாங்கம் தயாரில்லை! ஐ.தே.க வின் கடைசி காலத்திற்கே மங்கல
அவரவர் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப கடுகதி வீதியின் திட்டங்களை மாற்றியமைக்க அரசாங்கம் தயாரில்லை. கடுகதி வீதி உரிய விதி முறைகளுக்கேற் பவே நிர்மாணி க்கப்படுவதாக அமைச்சர் ரோஹித அபேகுண வர்தன தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், கப்ப ற்துறை அமைச்சில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பின் போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு இது போன்ற அதிவேக பாதைகளை நிர்மாணித்து கொடு ப்பதை எதிர்கட்சியினால் சகிக்க முடியாதுள்ளது.
இதனை விமர்சிக்கும் மங்கல சமரவீரவிடம் நான் ஒன்றை கேட்கின்றேன். தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 1990, 92ம் ஆண்டு காலப்பகுதியில் கட்டுநாயக்க கொழும்பு அதிவேக பாதையை நிர்மாணிப்பதற்கான ஆய்வறிக்கையை தயாரிப்பதற்கு 560 மில்லியன் யென் செலவிடப்பட்டது. குறைந்த பட்சம் அதனை கொண்டு ஒரு அடிக்கல்லாவது நாட்டினார்களா?, குறைந்த பட்சம் தாயரிக்கப்பட்ட அந்த அறிக்கையையாவது வெளியிட்டார்களா?
ஐக்கிய தேசிய கட்சியின் கடைசி காலத்திற்கே மங்கல சமரவீரவை அந்த பக்கத்திற்கு எடுத்து கொண்டார். இந்த தலைமைத்துவ சபை மங்கல சமரவீரவின் ஆலோசனையாகும். இறுதியில் ஐக்கிய தேசிய கட்சியை அழித்து விடுவார்கள். ஏற்கனவே அழிந்து விட்டது. எஞ்சியிருக்கும் பகுதியையும் அவர் அழித்து விடுவார்.
0 comments :
Post a Comment