வீசா இன்றி இலங்கையில் தங்கியிருக்கும் ஆயிரம் பேரை கைது செய்ய நடவடிக்கை
வீசா இன்றி இலங்கையில் தங்கியிருக்கும் ஆயிரம் பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
குடிவரவு குடியகல்வு திணைக்கள புலனாய்வுப் பிரிவினர் இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.
வீசா காலம் முடிவடைந்து பல ஆண்டுகள் சிலர் இவ்வாறு நாட்டில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசித்த சிலர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்,
இன்னும் சிலர் திருமணம் செய்து கொண்டுள்ளனர், சிலரைக் காணவில்லை.
இந்தியா, ரஸ்யா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு வீசா காலம் முடிவடைந்து நாட்டில் தங்கியுள்ளனர்.
இவர்களை கைது செய்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

0 comments :
Post a Comment