சீனாவின் முதலாவது விமானம் தாங்கி கப்பல் நேற்று(28.11.2013) தன் சோதனையை தொடங்கியதன் மூலம் சீன கடல் எல்லையை சுற்றியுள்ள நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அரங்கில், சீனா தன் படை பலத்தை நிரூபிக்கும் வகையில், உக்ரைன் நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பல், கடந்த ஆண்டு, சீன கடற்படை தன் கடற்படையில் இணைத்துக் கொண்டதுடன் இதனை முதல் முறையாக நேற்று சீனாவின் தெற்கு கடல் பகுதியில் சோதனைக்காக களம் இறக்கப்பட்டது.
ஆரம்ப கட்ட சோதனையின் போது இக்கப்பலுக்கு பாதுகாப்பாக சீன கடற்படையின் இரு போர் கப்பல்கள் சென்றன.
சீன அரசின் இந்த நடவடிக்கையானது "எந்த நாட்டையும் மிரட்டுவதற்கான முயற்சி அல்ல” இது, சீனாவின் சாதாரண கடற்படை சோதனை நடவடிக்கையே என, சீன கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment