Thursday, November 14, 2013

துமிந்தசில்வா வீழ்ந்ததையும் பாரத லக்ஷ்மன் வாகனத்திற்கு பின்புறமாக மறைவதையும் எனது கண்ணால் கண்டேன் - சாட்சி

முல்லேரியா படுகொலைச் சம்பவத்தின் போது பாராளும ன்ற உறுப்பினர் ஆர்.துமிந்தசில்வாவின் மீதே முதலில் துப் பாக்கிச் சூடு மேற்கொள்ளபட்டது என பாராளுமன்ற உறுப் பினர் ஆர்.துமிந்த சில்வாவின் பாதுகாப்புக்காக சென்றிருந்த பொலிஸ் கான்ஸ்டபில் கலுபத்தனகே ஹேமந்த குமார நீதி மன்றத்தின் முன்னிலையில் நேற்றைய தினம் மீண்டும் சாட்சியமளித்தார்.கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இந்த சாட்சியம் வழங் கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று மோதல் ஒன்று இடம்பெற்றதாகவும், இதன்போது, தலையில் துப்பாக்கிச் சூட்டுடன் ஆர்.துமிந்த சில்வா வீழ்ந்து கிடப்பதை கண்ட தாம் அவரை வாகனத்தில் ஜயவர்தனபுர மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகவும் பாரா ளுமன்ற உறுப்பினரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்ற போது பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர அங்கிருந்து ஓடி தமது வாகனத்திற்கு பின்புறமாக மறை வதை தாம் கண்டதாகவும், சாட்சியாளர் ஹேமந்த தெரிவித்தார்.இந்த நிலையில், குறித்த வழக்கின் துமிந்தசில்வாவே முதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார் என் ற அடிப்படையில் தொடர்ந்தும் வழக்குவிசாரணையை நடத்துவதில் அர்த்த மில்லை என்று பிரதிவாதி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இந்த சந்தர்ப்பத்தில் வழ க்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment