பழிவாங்கும் முகமாக வீடொன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது!
உடுவில் தெற்கு ஈஞ்சடி வைரவர் ஆலயப் பகுதியில் உள்ள ஒரு வீடு தீயிட்டு எரிக்கப்பட்டதில் பல லட்சம் ரூபா பெறுமதியான வீட்டுப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது கடந்த தீபாவளித் திருநாளில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட பகைமையைத் தொடர்ந்து பழி வாங்கும் முகமாக இந்தச்சம்பவம் நடை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எரிக்கப்பட்ட வீட்டில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றுக்காக வீட்டை கழுவுவதற்கு வசதியாக வீட்டுப் பொருட்கள் அனைத்தும் ஒரு அறையில் வைக்கப்பட்டு இருந்த வேளையில் குறிப்பிட்ட அறைக்கு தீயிடப்பட்டதால் வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் இலத்திரனியல் பொருட்கள் உட்பட பல பொருட்களும் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் வீடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்தச்சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளர்களினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின அடிப்படையில் பொலிசார் குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment