Monday, November 18, 2013

நிந்தவூரில் பதற்றம்: ஹர்த்தால் அனுஷ்டிப்பு!

நிந்தவூர் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலையொ ன்று ஏற்பட்டதையடுத்து, அங்கு பதற்றமான நிலைமை யொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் கள் தெரிவிக்கின்றன.

நிந்தவூர் பகுதியில் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தல் மற்றும் கொள்ளை யர்களை கண்டுபிடித்தல் தொடர்பில் விசேட விழிப்பு குழுவொன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது.

இதன் பிரகாரம் இரவு 9 மணிக்கு பின்னர் வீடுகளிலிருந்து வெளியே செல்கின்ற வர்கள் தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை எடுத்துசெல்லவேண்டும் என்று அந்த குழு தீர்மானித்து அந்த தீர்மானத்தை பள்ளிவாயில்களின் ஊடாக பொதுமக்களுக்கு அறிவித்தது.

இந்நிலையில்,விசேட அதிரடிப்படையினர் அணியும் ஆடைகளை ஒத்த ஆடைகளை அணிந்து நிந்தவூர் கடற்கரை பகுதிக்கு வந்த நான்கு அல்லது ஐந்து பேர் அடங்கிய குழுவினர் கடற்கரையில் வைத்து ஆடைகளை மாற்றிக்கொண்டு நேற்றிரவு ஊருக்குள் வருவதை கண்ட பொதுமக்கள் அவர்களை சுற்றிவளைத்து ஆள் அடையாளத்தை உறுதி படுத்துமாறு கேட்டுள்ளனர்.

எம்மால் சுற்றிவளைக்கப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், விசேட அதிரடிப்படையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதிகளில் டயர்களை போட்டு எரித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் இன்று ஈடுபட்டுள்ளமையால் வழமையான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்நது நிந்தவூரில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலால் அப்பகுதியில் கர்த்தால் அனுஸ்டிக்கப்படுவதால் பிரதேசத்திலுள்ள கடைகள், அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டு, கற்கள் மரக்கட்டைகள் போடப்பட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன இதனால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com