ஜனாதிபதியின் தொலைபேசி தொடர்புகள் ஒட்டுக்கேட்பதாக சந்தேகம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினுடய தொலைபேசி தொடர்புகளை அமெரிக்க பாதுகாப்புப் பிரிவின் சேவையினர் இரகசியமாக ஒட்டு கேட்கிறார்களா ?? என்பது தொடர்பில் இலங்கை பாதுகாப்பு பிரிவினர் அவதானம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவுடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணிவரும் இலங்கையின் செயற்பாடுகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்கும் அமெரிக்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவின் தொலைபேசி தொடர்புகள் வெளிநாட்டு ஒற்று சேவையினரால் இரகசியமாக ஒட்டுக்கேட்கப்படுவதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலையிலேயே தற்போது ஜனாதிபதியின் தொலைபேசி தொடர்பு ஒட்டுக்கேட்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவின் ஒற்று சேவைப் பிரிவினரினால் சுமார் 35க்கும் மேற்பட்ட நாடுகளின் அரச தலைவர்களின் தொலைபேசி தொடர்புகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது. அத்தோடு சில நாடுகளின் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் தொலைபேசி தொடர்புகளும் இவ்வாறு ஒட்டு்க்கேட்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
0 comments :
Post a Comment