ஆப்பிளை பழிவாங்கியது சாம்சங்!
அமெரிக்க நிறுவனமான ஆப்பிளுக்கு எதிரான காப்புரிமை வழக்கில், கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க நீதிமன்றம் இந்தத்தொகை முழுவதையும் சாம்சங் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனமும் வாதாடியது.
கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிமுறைகளை மீறி விட்டதாகவும் அதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் (6,200 கோடி) அபராதமாக அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பானது.
0 comments :
Post a Comment