Tuesday, November 5, 2013

இரு வேறு ரயில் விபத்துக்களில் மூவர் பலி!

பேலியகொட-வனவாசல பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில், மோட்டார் வண்டி ஒன்று ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழு ம்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோட்டார் வண்டி மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தின் போது மோட்டார் வண்டியில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை ரத்கம - வெல்லபட பிரதேசத்தில் ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்நபர் கையடக்க தொலைபேசியில் பேசியவாறு ரயில் கடவையில் வாகனத்தை செலுத்திச் சென்ற நிலையில் விபத்துக்கு முகங் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் புஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான ஒருவர் என தெரியவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com