Saturday, November 23, 2013

இந்த ஜென்மத்தில் இல்லாவிட்டாலும் அடுத்த ஜென்மத்திலாவது மஹிந்தரின் மச்சானாக வர ஆசைப்படுகிறாராம் மர்வின் சில்வா!

ஜனாதிபதியின் 68வது பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த 18 ஆம் திகதி நாடு முழுவதும் சமய வழிப்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அத்துடன் அமைச்சர் மேர்வின் சில்வாவும் களனியில் உள்ள விஷ்ணு கோயிலில் விசேட பூஜை வழிப்பாடுகளை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த வழிப்பாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி 5.30 அளவில் நேரத்தை ஒதுக்கியிருந்தார். எனினும் ஜனாதிபதி வருவது தாமதமாகியதால், மேர்வின் சில்வா ஜனாதிபதியின் பாதுகாவலரான நெவில் என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

ஏன் தாமதம் என அமைச்சர் மேர்வின் சில்வா பாதுகாப்பு அதிகாரியிடம் வினவியுள்ளார். போதி பூஜை நடப்பதாகவும் அதுதான் தாமதத்திற்கு காரணம் என்றும் பாதுகாப்பு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த உரையாடல் அத்துடன் முடிவெடைந்தது. அத்துடன் அரை மணிநேரத்திற்கு ஒரு முறை அமைச்சர் அந்த அதிகாரியுடன் தொடர்புக் கொண்டார். நேரம் 8.30யும் தாண்டியது.

மேர்வின் சில்வாவுக்கு கோபம் தலைக்கேரியது. தொலைபேசியில் மீண்டும் தொடர்புக் கொண்டார் “என்ன மச்சான் செய்றீங்க நான் எவ்வளவு நேரமாக காத்துக்கொண்டிருக்கின்றேன்” என அந்த அதிகாரிக்கு பதிலளிக்க விடாமல் மேர்வின் பேசிக்கொண்டே இருந்தார்.

பதில் எதுவும் அளிக்காமலே அதிகாரியின் தொலைபேசி துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு அதிகாரியின் தொலைபேசிக்கு வந்த அழைப்பை ஜனாதிபதியே எடுத்திருந்தார்.

இரவு 9.30 அளவில் ஜனாதிபதி கோயிலுக்கு வந்தார். வாகனத்தில் இருந்து இறங்கிய ஜனாதிபதி மேர்வின் சில்வை பார்த்து “ ஆ.... நான் உனக்கு இப்ப மச்சான் என்ன?” என்றார்.

ஜனாதிபதி அப்படி கூறியதும் அதிர்ச்சியடைந்த மேர்வின் சில்வா, பாதுகாப்பு அதிகாரி நெவிலை நோக்கினார்.

“என்னால் எதனையும் செய்ய முடியவில்லை. ஜனாதிபதிதான் தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்தார்“ என பாதுகாப்பு அதிகாரி கூறினார்.

இந்த ஜென்மத்தில் இல்லா விட்டாலும் மறு ஜென்மத்திலாவது அப்படி நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக அமைச்சர் மேர்வின் சில்வா ஜனாதிபதியை பார்த்து அடக்கமாக தெரிவித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com