பொலிஸாரின் பெயரில் பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல்!!!
பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தினால் நடை முறைப்படுத்தப்பட்டுவரும் பணப்பரிமாற்றல் முறைமூ லம் உயர் பொலிஸ் அதிகாரிகளின் பெயரில் நிதி மோச டியில் ஈடுபடுவோரை கைது செய்ய விசேட பொலிஸ் குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவி த்தார்.
பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அஜித் குமார பிட்டிகல, பயங்கரவாத தடுப்புப்பிரிவின் அத்தியட்சகர் அசங்க கரவிட்ட, கல்கிசை பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர கரவிட்ட ஆகியோரின் பெயரிலேயே தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு இந்த பணமோசடி இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் மேல்மாகாணத்தின் வடக்குப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எல்.ஜி.குலரத்ன கேட்டுக்கொண்டதாகக் கூறி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கந்தவத்தவின் பெயரை குறிப்பிட்டு பணம் பெறும் தொலைபேசி அழைப்பொன்று ஏற்படுத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மத்துகம பிரதேசத்தில் பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகலவின் பெயரை தொடர்புபடுத்தி பணம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு பதிவாகியுள்ளது.பொலிஸ் திணைக்களத்தின் எந்தவொரு உயர் அதிகாரியும் இவ்வாறு தொலைபேசியூடாக அழைப்பினை ஏற்படுத்துவதில்லை என பொதுமக்களுக்கு பொலிஸ் திணைக்களம் அறிவிப்பதுடன் அவ்வாறு அழைப்புகளை ஏற்படுத்தி பணம் கோரப்படின் குறித்த பணத் தொகையை அவர்கள் கூறும் கணக்கில் வைப்பிலிட வேண்டாம் எனவும் பொலிஸ் திணைக்களம் கோரியுள்ளது.
அத்துடன் அவ்வாறான அழைப்புகள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறையிடுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு கையடக்கத் தொலைபேசியிலிருந்து மற்றுமொரு தொலைபேசிக்கு பணம் பரிமாற்றும் சேவையை முன்னெடுத்து வருகின்றன. இதனைப் பயன்படுத்தியே குற்றச் செயல்கள் இடம்பெறுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment