Tuesday, November 5, 2013

தெமட்டகொடை ‘மிஹிந்துசென்புர’ வீடமைப்புத்திட்டம் கையளிக்க தயார்நிலையில்! (படங்கள் இணைப்பு)

அனைவருக்கும் வீடு எனும் மகிந்த சிந்தனையில் கீழ் தெமட்டகொடையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “மிஹிந்துசென்புர” 500 வீட்டுத்திட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் பயனாளிகளிடம் கையளிக்க தயார் நிலையில் உள்ளது. இவ்வீடுகள் எதுவித பாகுபாடுமின்றி சமத்துவ அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக, இது தொடர்பாக நேற்று (நவ.04) மாலை வோட்டஸ் ஏஜில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போது பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இங்கு செயலாளர் தொடர்ந்து உரையாற்றுகையில், தற்போது கொழும்பு நகரை செரிப்பரம் மற்றும் குடிசைகள் அற்ற பிரதேசமாக மாற்றும் துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டவண்ணம் உள்ளது. இதற்கமைய தற்போது இங்கு இருக்கும் சேரிப்புரங்கள் அகற்றப்பட்டு அவர்களுக்கென நவீன வீட்டுத் தொகுதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டவண்ணம் உள்ளன. அதற்கமைய அமைக்கப்பட்டுள்ள இவ் வீட்டுத் திட்டத்தின் அலகுகள் சேரிப்புரங்களில் உள்ள குடும்பங்களுக்கும் மற்றும் குறைந்த வருமாணம் பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழும் குடும்பங்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இவ்வீட்டுத் திட்டத்திட்டத்தின் கீழ்.இங்கு வசிக்கவிருக்கும் பயனாளிகளின் எதிர் கால தலைமுறையினரும் சிறந்த முறையில் விருத்தி செய்யப்பட்ட சூழலில்வாழும் சந்தர்ப்பத்தை பெறக்கூடியதாகவிருக்கும் என அவர் வலியுறுத்தி கூறினார்.

இவ் வீட்டுத் தொகுதியின் ஒவ்வொரு வீடும் இரண்டு அரைகளுடன் கூடிய சகல வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இவ்வீடமைப்புத் திட்டமானது பாதுகாப்புச் செயலாளரது நேரடி மெற்பார்வையிலும் வழிகாட்டலுடனும்’ முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


No comments:

Post a Comment