நுரையீரல் வைரஸ் தொடர்பாக இன்று ஒருவர் பலியானதாக சவுதி அரேபியா அறிவிப்பு
சவுதி அரேபியாவில் கடந்த செப்டம்பர் மாதம் புதிய வைரஸ் தொற்று ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டில் சார்ஸ் எனப்படும் நுரையீரல் வைரஸ் நோய் உலகளவில் 800 பேரைப் பலி வாங்கியது. சாதாரண சளியுடன் இணைந்த தொற்று வகையைச் சேர்ந்த இந்த நோயுடன் புதிதாகத் தோன்றியுள்ள வைரஸ் நோய் தொடர்புள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மத்தியக் கிழக்கு நாடுகளில் இந்த நோய் முதலில் காணப்பட்டதால் இதற்கு மெர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்று ஏற்பட்டால் விரைவாக சிறுநீரக இழப்பு ஏற்படலாம் என்றபோதிலும், சார்ஸ் போன்று இது தீவிரமாகக் குறிப்பிடப்படவில்லை.
இந்த வைரசினால் தாக்கப்பட்டுள்ளதாக இதுவரை 130 பேர் சவுதி அரேபியாவில் கண்டறியப்பட்டுள்ளார்கள். இவர்களில் 37 வயதுடைய ஒருவர் இன்று ரியாத்தில் இறந்துள்ளதாக சவுதி அரசின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனுடன் சேர்த்து இதுவரை இந்த நோய்த் தாக்கத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment