ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் உப தலைவராக பேராசிரியர் கருணாரத்ன ஹங்கவத்த தெரிவு!
யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் உப தலைவராக இலங்கை பிரதிநிதி பேராசிரியர் கருணாரத்ன ஹங்கவத்த ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸில் நடைபெற்ற யுனெஸ்கோவின் 37 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரின்போது அவர் உப தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதுடன் அங்கு நடைபெற்ற மாநாட்டில் இலங்கை பல்வேறு துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இந்தகூட்டத் தொடரின்போது பேராசிரியர் கருணாரத்ன ஹங்கவத்த உரையாற்றியுள்ளார்.
0 comments :
Post a Comment