Thursday, November 21, 2013

கிளிநொச்சி கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது தற்காலிக கருத்தடையே-திருமதி யூட்!

கிளிநொச்சி கிராமங்களில் கருத்தடை மேற்கொண்டது உண்மையே ஆனால் கட்டாயகருத்தடை அல்ல என்கிறார் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் .

கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமங்களான வேரவில் கிராஞ்சி வலைப்பாடு கிராமங்களில் 52 பெண்களுக்கு கருத்தடை மெற்கொண்டது உண்மையே அனால் அவை கட்டாயத்தின் பெயரில் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் அவர்களின் விருப்பத்தின் பெயரிலேயே மேற்கொள்ளப்பட்டது அதுவும் தற்காலிக கருத்தடை சிகிச்சையே முறையே மேற்கொள்ளப்பட்டது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திருமதி எஸ் . ஆர் . யூட் அவர்கள் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான வேரவில் வலைப்பாடு கிராஞ்சி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டதான கருத்தடை தொடர்பில் பிபிசி மற்றும் பல பத்திரிகைகளிலும் வெளியான செய்தி தொடர்பில் நேற்று(20.11.2013) கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வடக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவர் கமலேந்திரன் அவர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனை தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் மாகாண மட்டத்தில் குழு ஒன்று அமைத்து விசாரணைகள் மேற்கொண்டோம் அந்த விசாரணை அறிக்கையில் இது ஒரு சாதாரண தேசிய மட்ட நிகழ்ச்சி கடந்த யூன் மாதம் போசாக்கு மாதமாக இலங்கை பூராகவும் அறிவிக்கப்பட்டது அந்த காலப்பகுதியில் ஜந்து வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு அவர்களின் நிறைகள் அளக்கப்பட்டு இதன் போது வேரவில் கிராஞசி வலைப்பாடு பகுதிகளில் பிள்ளைகளின் நிறைகள் குறைவாக காணப்பட்ட காரணத்தினால் இந்த பிரதேசங்களில் சுகாதார சம்மந்தமாக விசேட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று ஆதாவது சுகாதார கல்வி மற்றும் சிறுவர்களின் போசாக்கு சம்மந்தமாக கிளிநொச்சி மாவட்ட தாய்சேய் நலனுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரிக்கு பணித்திருந்தார்கள் .

அதனடிப்படையில் அந்த வைத்திய அதிகாரி ஏனைய நான்கு அதிகாரிகளுடன் இணைந்து போசாக்கு மற்றும் சுகாதார கல்வி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்தி அன்றையதினமே குடும்ப கட்டுப்பாடு தொடர்பாகவும் வருகைதந்திருந்த தாய்மார்களுக்கு விளக்கமளித்தார் இதனை தொடர்ந்து அவர்களின் விருப்பத்தின் பெயரிலே கருத்தடை சிகிசை மேற்கொள்ளப்பட்டது எனக்குறிப்பிட்டார்.

மேலும் இந்த கருத்தடை முறையானது முற்றுமுழுதாக தற்காலிகமானது எந்த தாயாவது தனக்கு வேண்டாம் என்று விரும்பினால் அந்த நிமிடமே அதனை எடுத்துவிடவும் முடியும் இதன் பின்னர் குறித்த தாய் கர்ப்பம் அடையமுடியும் எனக்குறிப்பிட்டார்.

இதனைவிட எங்களுடைய விசாரணையில் அந்த பிரதேசங்களில் எந்த தாயும் வற்புருத்தப்படவில்லை ஆனால் இதில் அங்கு சென்ற மருத்துவ குழுவினர் குடும்ப கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனை வழங்கிய பின்னர் தாய்மார்களுக்கு கால அவகாசம் வழங்கி அவர்களை தங்களுடைய கணவனுடனும் குடும்பத்துடனும் கலந்தாலோசித்து பின்ன்ர் இந்த கருத்தடை மேற்கொண்டிருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது அந்த தாய்மார்களின் உரிமை மதிக்கப்பட்டிருக்கும் இதனைவிடுத்த சுகாதார கல்வி வழங்கப்பட்ட அன்றே மேற்கொள்ளப்பட்டதுதான் அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனத்தெரிவித்தார்.

1 comments :

ஈய ஈழ தேசியம் ,  November 22, 2013 at 8:24 AM  

சுகாதார கல்வி வழங்கப்பட்ட அன்றே மேற்கொள்ளப்பட்டதுதான் அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனத்தெரிவித்தார்.

எப்படியாவது சந்தேகங்களை ஏற்படுத்தி அதை திட்டமிட்ட தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாக காட்டி பிரசாரம் செய்து உண்டியல் குலுக்க தான் பும்பெயர் புலிகள் முயற்சிக்கிறார்கள்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com