அண்டத்தில் கணக்கிட முடியாத எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்கள் இருக்கின்றன. நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் விண்வெளியில் மிக நெருக்கமாக உள்ள 'கேலக்டிக்' என்ற ஒழுங்கற்ற விண்மீன் திரள் கூட்டம் ஒன்று இருக்கின்றது.பூமியின் தென் துருவத்தில் ஒரு இலட்சத்து 63 ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள இந்த மிகப்பெரிய மேகக்கூட்டத்திற்குள் நட்சத்தி ரங்கள் அழிந்துகொண்டும் தோன்றிக்கொண்டும் இருக் கின்றன.இதன் அரிய காட்சிகள் சிலி நாட்டின் மலைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஐரோப்பியாவின் தென்பகுதி ஆய்வக டெலெஸ்கோப் மூலம் படம் பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
நட்சத்திரங்கள் வெடித்து சிதறும்போது வெளியேற்றப்படும் பிரகாசமான எரியும் வாயு உள்ளிட்ட இந்த பிரளயத்தின் காட்சிகளும் படம் பிடிக்கப்பட்டுள்ளன.இந்த தென் துருவ கேலக்டிக் விண்மீன் கூட்டத்தை நம்மால் வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இங்குள்ள வயதான நட்சத்திரங்கள் மற்றும் இளம் நட்சத்திரங்களை சுற்றி மிகவும் அடர்த்தியான மேகக்கூட்டங்களில் புதிய நட்சத்திரங்கள் உருவாகும் பகுதிகளின் புகைப்படங்கள் டெலெஸ்கோப் வெளியிடப்பட்டுள்ளன.
புதிய நட்சத்திரங்கள் உருவாகிறபோது தீவிர வெப்பத்திலான மிகப்பிரகாசமான ஒளிப்பிரளயம் வெளியிடப்படுகிறது.என்.ஜி.சி. என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் டிராகன் தலை வடிவ ஒளிபிம்பம் இருப்பதை அதன் வலது தொகுப்பில் தெரிந்துகொள்ள முடியும்.
No comments:
Post a Comment