இளவரசர் சார்ள்ஸ் நுவரெலியாவுக்கு விஜயம்!
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இலங்கை வருகைதந்துள்ள இளவரசர் சார்ள்ஸ் நேற்று(16.11.2013) சனிக்கிழமை நுவரெலியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் லபுக்கலை தேயிலை தொழிற்சாலையையும் சார்ள்ஸ் பார்வையிட்டதுடன் அந்த தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத் தையும் திறந்து வைத்தார்.
இதே வேளை இந்த தோட்டத்திற்கு மகாராணி 1954 ஆம் விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டுமல்லாது நுவரெலியாவில் அமைந்துள்ள விசேட தேவையுடையவர்களுக்கான பாடசாலைக்கும் சென்றுள்ள சார்ள்ஸ் அந்த சிறுவர்களுடன் சிறிது நேரம் செலவு செய்ததுடன் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி இளவரசி கமிலா ஆகியோர் லபுக்கலை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தை பார்வையிட்டதுடன் அங்கு பணியாற்றியவர்களுடனும் கலந்தரையாடினார்.
0 comments :
Post a Comment