எதிர்க்கட்சித் தலைவர் சென்றார் சிறிக்கொத்த! வந்தது ஆர்ப்பாட்டம்!!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத் தவிற்கு முன்னால் சிலர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொ ண்டுள்ளனர். இதனால் அங்கு ஒருவகை பதற்றம் நிலவி யது. இன்று (13) மாலை சிறிகொத்தவில் ´மனித உரிமை மாநாடு´ நடத்தப்படவுள்ள நிலையில் அதில் கலந்து கொள்ளவென காணாமல் போனவர்களின் உறவினர்கள் வந்துள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள எதிர்கட்சித் தலைவர் சிறிகொத்த சென்றவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவரது வானத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதென தெரியவருகிறது.
0 comments :
Post a Comment