யாழில் பெண் ஒருவரை வெள்ளை வேனில் கடத்த முயன்றவர்கள் மடக்கி பிடிப்பு!
தனிமையில் வந்த இளம் பெண்ணொருவரை வேனில் கடத்த முற்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் பொதுமக்களால் மடக்கி பிடித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது உறவினரின் திருமண வைபவத்துக்கு யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதி, இராசாவின் தோட்டத்து சந்தியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது வேனில் வந்த இளைஞர்களால் கடத்த முற்பட்ட சமயம் குறித்த பெண் சத்தமிட்டதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் குறித்த சந்தேக நபர்களை மடக்கி பிடித்து சந்தேக நபர்களையும் அவர்கள் பயணம் செய்த வேனையும் கைப்பற்றி யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தச்சம்பவத்தில் மடக்கி பிடிக்கப்பட்ட இரு இளைஞர்களும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment