Sunday, November 10, 2013

உடுவை தம்மாலோக தேரர் மந்த புத்தியுடையவர் - ஹேகொட விபஸ்ஸி தேரர்!

இந்நாட்டு மக்களுக்கு கஸினோ சூதாட்டம் ஆகாது என வும், வெளிநாட்டவர்களுக்கு ஆகுமானது என்றும், குறிப்பி ட்டிருக்கின்ற கூற்றிலிருந்து உடுவை தம்மாலோக்க தேரர் பற்றிய ஒரு முடிவுக்கு வரலாம். அவர் மந்தபுத்தியுடை யவர் என்றே சொல்லலாம் என ஹேகொட விபஸ்ஸி தேரர் குறிப்பிடுகின்றார்.

“பௌத்த பரிபாஷையில் சூதாட்டம், கஸினோ போன்றவை அக்பதுக்கோ என்று அழைக்கப்படுகின்றது. இவை அழிவின் அடிப்படையாகும்.

உடுவை தம்மாலோக்க தேரர் இவ்வாறான விடயங்களை சொல்வாராகில், அவர் மதக் கோட்பாட்டுக்கு விரோதமானவராகவே கணிக்கப்படுவார். அதனால் அவரை மந்த புத்தியுடையவர் என்றே சொல்லலாம். இதிலிருந்து அவரது அறிவீனமே தெளிவாகின்றது.

சிலவேளை, யாரேனும் ஒரு ஒப்பந்தக்காரரின் தேவைக்கேற்ப அவர் ஆடுகின்றாரோ தெரியாது. புத்தபகவான் முழு உலகையும் சரி செய்யப் போகவும் இல்லையே! அவர் நல்வழிக்கான மார்க்கத்தை மட்டுமே காட்டிச் சென்றார்.

உடுவை தேரருக்கு சீரியதொரு அறிக்கையை விடத் தெரியாதுவிட்டால், அவர் மௌனமாக இருக்கலாம் அல்லவா?“ என்றும் அவர் கஸினோ சூதாட்டம் தொடர்பில் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com