Friday, November 8, 2013

பொதுநலவாய மாநாட்டிக்காக பல்கலைக்கழங்களுக்கு மூடுவிழா! பல்கலை மாணவர்கள் எதிர்ப்பார்ப்பாட்டம்!

CHOGM நடைபெறும் காலப்பகுதியில் நாடெங்கிலும் உள்ள பல்கலைக் கழகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் சீற்றமடைந்துள்ள பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் இன்று நண்பகல் கொழும்புக் கோட்டையில் பலத்த எதிர்ப்பார்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிடுகிறது.

பல்கலைக் கழக மாணவர்களின் எதிர்ப்பை கவனத்திற்கொள்ளாதிருக்கவே, அரசாங்கம் இவ்வாறு பல்கலைக் கழகங்களை மூடுகின்றது என அம்மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளது. இது கவலைக்குரிய விடயம் எனவும் அது தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும், பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுங் காலத்தில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது தடை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

2 comments:

  1. They do concentrate their minds more in hooliganism,protests demonstrations and violent activities.Better to be good students
    as an educated crowd later on take over the country into your hands with
    your worthy ideas and policies,rather
    getting now into the hands of cunning politicians and spoiling your career.Be a supporter of the conferrence held in your country and be not an opposer

    ReplyDelete
  2. God has given you a nice opportunity
    do not waste your time in digging the thrash.

    ReplyDelete