விசா முறைகளை மீறி செயற்பட்ட ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார்!
விசா விதி முறைகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு தற்சமயம் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே பிரஜையான கவிஞர் வி.ஜ.எஸ்.ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
தனது தாயின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெயபாலன் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சுற்றுலா விசாவில் இலங்கை வந்த நோர்வே பிரஜை ஜெயபாலன், விசா விதிமுறைகளை மீறி யாழ்ப்பாணத்தில் கூட்டங்களை நடத்தியதுடன் யாழ்.ஊடக அமையத்தில் தமிழ் ஊடகவியலாளர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களை அழைத்து கடந்த 18 ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியதுடன் ஆயுதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் முனைப்புகளை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் என இவர் இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் பல சந்திப்புக்களை மேற்கொண்ட பின் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த போது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொண்டதன் பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சுற்றுலாவிசாவில் வந்த ஒருவர் விசா நடைமுறையை மீறி ஊடகவியாலாளர் சந்திப்பைமேற்கொண்டது மற்றும் இன நல்லிணக்கத்துக்கு எதிராக பேசியதாலேயே கைது செய்யப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
1 comments :
See This.
"நீதியற்ற வெற்றியில் களி கொண்ட வீடுகளில் நாளை ஒப்பாரி எழும். வெண்புறாக்களாய்க் கொல்லப் படுபவர் புலம்பி அழுத தெருக்களில் நாளை குதூகலம் நிறையும்.தீப்பட்ட இரும்பென் கண்கள் சிவந்தேன் சபித்துப் பாடவே வந்தேன். முகமூடிகளும் ஒப்பனையுமற்ற உருத்ர தாண்டவப் பாடலிது. என் தமிழின் மீதும் என் கவிதைகள் மீதும் ஆணையிட்டு நான் அறம் பாடுகிறேன். எனது சமரசங்களிலாத சத்தியத்தின் பெயரால் சபிக்கிறேன் எனது மக்களின் இரத்தத்தில் கைகளும் மனங்களும் தோய்ந்தவர்களே உங்களுக்கு ஐயோ. தர்மத்தின் சேனையே என்னை களபலியாக எடுத்துக்கொள்".
என்கின்ற வரிகள் அடங்கிய அறம்பாடலை வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி மகிழ்ந்தவர் ஜெயபாலன். கருத்து வெளியிடுவதும் அறம்பாடுவதும் அவரவர் சுதந்திரம். ஆனால் இப்படி அதிதீவிர அரச எதிர்பாளனாக இருக்கும் இவர் பகிரங்கமாக நான் இலங்கை போகிறேன் என அறிவித்து விட்டு வந்ததும் இங்கு வந்த பின்னர் அவர் நடந்கொண்ட விதமும் இவரது கபட நாடகத்தை வெளிப்படுத்துகிறது. ஜெயபாலன் தனது தாயாரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதை தடுப்பது சரியென்று வாதிடுவதோ அல்லது பல்லாயிரக்கணக்கானவர்களின் நினைவிடங்களும் பல வாழ்விடங்களும் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டதோ அல்லது மரணித்தவர்களிற்கான அஞ்சலி உரிமைகள் மறுக்கப்படுவதை நியாயப்படுத்தவதோ நியாயமானதாகாது.
தனது தயாரை இறுதிநாட்களில் தவிக்க விட்ட வெப்பியாரத்தை ஜெயபாலன் முகப்புத்தகத்தில் ஏற்கனவே எழுதி, தாயின் கல்லறையிலிருந்து புதிய கல்வெட்டு எழுத ஆரம்பிக்கப் போவதாக வேறு சொல்லியிருக்கிறார். தாய்மாரின் கண்ணீருக்கு மகன்களே காரணமாயிருப்பதும், அனாதையாய் தாய்மார் இறந்து போகும் துயரக்கதையும்தானே நமது மரபாகவே ஆகிவிட்டிருக்கின்றது. அவர் எதையும் எழுதட்டும். ஆனால் இப்படி நாள், இடம் ,நேரம் எல்லாம் குறித்து எழுதப்படுமளவிற்கு நமது தமிழ்கவிதைச் சூழல் இயந்திரத்தன்மையாகிவிட்டது என்பதுதான் வேதனை.
உண்மையில் அவர் தனது தயாரின் கல்லறைக்கு அஞ்சலிசெலுத்த வந்திருந்தால், அதனை ஆர்ப்பாட்டமின்றி செய்திருக்கலாம். அதனை ஒரு புரட்சி செயலாகவோ அல்லது அரசியல் செயற்பாடாகவோ பிம்ப உருவாக்கம் செய்திருக்க வேண்டியதில்லை. ஒருவன் தனது தாயாரின் கல்லறையில் வந்து அஞ்சலி செலுத்துவதில் என்ன புரட்சி இருக்கிறது. சில வேளைகளில் அஞ்சலி செலுத்தாதவன்தான் எதாவது புரட்சி நியாயங்கள் சொல்லலாம்.
பகிரங்க முன்னறிவுப்புடன் இலங்கை வந்த ஜெயபாலன் விமானநிலையத்தில் தனக்கு எதுவும் நடக்கவில்லையே என்கின்ற வேக்காட்டுடன் அன்று மாலையே கொழும்பு தமிழ்சங்கத்தில் நடந்த விழா ஒன்றில் அழையா விருந்தாளியாக நுழைந்து அரச எதிர்ப்பு கருத்துக்களை ஆவேசத்துடன் வெளிப்படுத்தி அங்கே பரபரப்பு எற்பட முறைத்துக் கொண்டு வெளியேறினாராம்.
சில வாரங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள (புலிகள் அமைப்பில் செயல்பட்டு இன்று அமைதியாக இருக்கும்) நண்பர்கள் சிலரை வற்புறுத்தி, அவர்களுக்கிருந்த தொடர்புகளை பயன்படுத்தி யாழ் ஊடக மையத்தில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். இதில் இவர் வெளியிட்ட கருத்துக்களும் காட்சிகளும் (இவராலேயே அனுப்பப்பட்டு) வெளிநாட்டு உள்நாட்டு ஊடகங்களில் வெளிவந்த நிகழ்வே இவர் கைதுக்கு காரணமாக அமைந்தது எனலாம்.
அதே வேளை கைது செய்யப்படுவதற்கு முதல்நாள் வவனியா காவல்த்துறையினருக்கு நோர்வேயில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புத்தான் ஜெயபாலன் பற்றிய விபரங்களை காவல்த்துறைக்கு தெரியப்படுத்தியது எனவும் இது கவிஞரின் ஏற்பாடே எனவும் சொல்லப்படுகிறது.
நடக்கும் சம்பவங்கள் இதனையும் நம்பவைக்கும் வகையிலேயே உள்ளன. ஜெயபாலன் கடத்தப்பட்டார் என்பது முதல் செய்தி, ஓரிரு மணித்தியாலங்களில் அவர் வவுனியா காவல்நிலையத்தில் உள்ளார், லண்டனுக்கு கதைத்தார், இந்தியாவுக்கு கதைத்தார் ,அமைச்சர் பசீர் சேகாதாவுத் தொடாபில் உள்ளார் இப்படி தொடர், தொடர்பு அறிவிப்புக்கள்
Post a Comment