Monday, November 11, 2013

இலங்கைக்கு எதிராக மேற்கொள்ள திட்டமிட்ட பாரிய சூழ்ச்சி முறியடிப்பு!

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டு வாரம் ஆரம்ப மானதை தொடர்ந்து இலங்கைக்கு எதிராக மேற்கொள்ள திட்ட மிட்ட சூழ்ச்சியொன்று முறியடிக்க ப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்ட மைப்புடன் இணைந்து இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து நீக்கு வதற்கு மேற்கொண்ட முயற்சி குடிவரவு,குடிய கல்வு திணைக்களத்தின் தலையீட்டினால் முறியடிக்கப்பட்டுள் ளது.

அவுஸ்திரேலியாவின் பசுமை கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் லீ லியானொன்; எனும் செனட் சபை உறுப்பினரும், நியூசிலாந்து பசுமை கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜேன் லொகி என்பவரும் இன்று முற்பகல் தமிழ் தேசிய கூட்டமைபபின் பிரதிநிதிகளுடன் இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் செயற்படும் அரச சார்பற்ற அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களுடன் இலங்கைக்கு எதிரான சூழ்ச்சியொன்றை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தனர். இவ்விரு வெளிநாட்ட வர்களும் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்து ள்ளனர்.

இவ்வாறான வீசாவுடன் வருகை தரும் எவருக்கும் இலங்கையில் நாட்டுக்கு எதிராக மாநாடுகளை நடத்தவோ, கலந்துரையாடல்களை நடத்தவோ முடியாது. இவ்வாறான நிலமையில் இவ்விருவருக்கும் ஒரு போதும் இவ்வாறான குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இது போன்ற சந்திப்பொன்றை பம்பலபிட்டி ரெட் ரீட் மாவத்தையிலுள்ள 32ம் இலக்க இல்லத்தில் இன்று முற்பகல் நடத்த திட்டமிட்டிருந்த போதிலும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் வருகையை தொடர்ந்து பேச்சுவார்த்தையை அவர்களால் இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களை மேலதிக விசாரணைக்குட்படுத்தி இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேறுவதாக வழங்கிய உறுதியையடுத்து விடுவிக்கப்பட்டனர். லீ லியானொன் எனும் செனட் சபை உறுப்பினர் அவுஸ்திரேலியாவின் தமிழ் காங்கிரஸுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பவர் ஆவார். இந்த தமிழ் காங்கிரஸ் பிரிட்டனின் அருட்தந்தை எமானுவேல் தலைமை தாங்கும் பிரிட்டிஷ் தமிழ் அமைப்புடன் நேரடி தொடர்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து தற்காலிகமாகவேனும் ஒதுக்குவதே அவரது இந்த முயற்சியின் நோக்கமாகும். எனினும் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் கண்காணிப்பு காரணமாக இச்செயற்பாடுகள் முறயடிக்கப்பட்டன.

1 comments :

Anonymous ,  November 11, 2013 at 12:15 PM  

well done the department of immigration.Be cautious wolves may enter into our country in sheep's skin.Secondly we have traitors and black sheeps.Have an eye on the undesirable characters.Every Srilankan other than the traitors and black sheeps has the obligation to serve his or her mother country honestly.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com