இராட்சத கட்டியைக் குணப்படுத்த வயாகரா!
கழுத்தில் இராட்சத கட்டி ஏற்பட்டு உயிராபத்தான நிலை யை எதிர்கொண்டுள்ள மெக்ஸிக்கோ சிறுவன் ஒருவனைக் குணப்படுத்த பாலியல் ஊக்க மாத்திரையான வயாகராவை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சியுடாட் ஜு வா ரெஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஜோஸ் சியர்ரனோ என் ற மேற்படி 10 வயது சிறுவனின் கழுத்தில் வளர்ந்த இராட்சதக ட்டியானது, அவரது மூச்சுக்குழாயை அழுத்தி சுவாச செயற்கிரமத்தை நிறுத்தும் அபாயம் மிக்கது என மருத்துவ ர்களால் இனங்கண்டறியப்பட்டது.
அந்தக் கட்டியின் வளர்ச்சி நிலையைக் கட்டுப்படுத்தாமல் அதனை அறுவை சிகி ச்சை மூலம் அகற்றுவது பாதுகாப்பானதாக அமையாது என மருத்துவர்கள் கருதினர்.இந்நிலையில் சிறுவர்களில் இத்தகைய கட்டிகளின் வளர்ச்சியை வயாகரா கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜோஸுக்கு வயாகரா மாத்திரையை வழங்கி சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கான செலவை மாத்திரைகளை உற்பத்தி செய்து வரும் பபிஸர் நிறுவனம் ஏற்றுக்கொ ண்டுள்ளது.
0 comments :
Post a Comment