Saturday, November 2, 2013

தலிபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் ஹக்கீமுல்லா பலி! பாகிஸ்தானில் பதற்ற நிலை!

அமெரிக்ப்படையினரின் ஆளில்லா விமானம் மேற்கொண்ட தாக்குதலில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான ஹக்கீமுல்லா மசுத் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க உளவுப்பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மேலும் பலர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க உளவுத்துறை அலுவலகத்தின் மீது கடந்த 2009ஆம் ஆண்டு மேற்கொண்ட குண்டு தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரியாக செயல்பட்ட ஹக்கீமுல்லாவின் உயிருக்கு, 50 இலட்சம் டொலர்களை அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஹகிமுல்லாஹ் மெஹ்சுட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பதற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தலிபான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே சிக்கலில் உள்ள நிலையில், தற்போதயை நிiமை மேலும் பின்னடைவை தோற்றுவிக்கும் என்று கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தலிபான் இயக்கத்தின் சிரேஸ்ட தளபதி என கருதப்படும் கான் சாயிட் சன்ஜா, அந்த அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் புதிய தலைவர் பதவி ஏற்பதற்கு முன்னர் பாகிஸ்தானில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்டகின்றது

No comments:

Post a Comment