Thursday, November 14, 2013

முதலீடு செய்வதற்கு இலங்கையே பொருத்தமான நாடு! நான் இலங்கையில் முதலீடு செய்வது உறுதி - ஜேம்ஸ் பெக்கர்

யுத்தத்தின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் இப்போது மிகவும் வலுவான நிலையில் வளர்ச்சியடைந்து கொண் டிருக்கின்றது எனவும் இந்நிலையில் நான் இலங்கையில் முதலீடு செய்வது உறுதி. இதில் எந்தவித மாற்றமும் கி டையாது என அவுஸ்திரேலியாவின் கிறவுன் நிறுவனத் தின் தலைவர் ஜேம்ஸ் பெக்கர் தெரிவித்தார். 30 வருட யுத் தத்தின் பின்னர் இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட்டு ள்ளதுடன் பொருளாதாரமும் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனை வெளி நாட்டு ஊடகங்கள் உலகுக்கு தெரியப்படுத்த வேண்டு மென அவுஸ்திரேலியாவின் செனல் 9 தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் என்ற வ கையில் பெக்கர் கேட்டுக் கொண்டார். சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்று வரும் பொதுநலவாய வர்த்தக பேரவை மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறி ப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவின் க்ரவுன் நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் பெக்கர் மேலும் குறிப்பிடுகையில்,இறுதியாக அவுஸ்திரேலியாவில் பொதுநலவாய மாநாடு நடைபெற்றதன் இதன்மூலம், பேர்த்தில் உலகளாவிய வர்த்தத்துக்கான பாரிய சந்தர்ப்பங்கள் உரு வாகியுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் நான் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்ட போது பேர்த்தில் காணப்பட்ட சாதகமான சூழலை கொழும்பிலும் காணமுடிகின்றது. நாளாந்தம் நம்பிக்கையுடன் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் ஒரு நாடு இலங்கை. இலங்கைக்கு இது எனது ஐந்தாவது விஜயம். இம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடைகின்றமை மற்றும் தொடர்ச்சியான உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றினைக் கண்டு நான் கவரப்பட்டுள்ளேன்.

கடல் நகரம் மற்றும் பாரிய வர்த்தக நகரமான கொழும்பு பழையபட்டுப் பாதையின் கேந்திர நிலையமும் கூட என்று குறிப்பிடலாம். இவ்வாறான நிலையில் முதலீடு, சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தகங்களுக்கான சர்வதேச கேந்திர நிலையமாக இலங்கை முழுவதும் மாற்றமடைவதற்கு சாத்தியங்கள் உள்ளன. சவால்களை முறியடித்தல், நேர்மை ஆகியவற்றுக்கு புகழ் பெற்றதாக இலங்கை காண ப்படுகின்றது. மிகவும் பலமான நாடுகளின் பலத்தை பரீட்சித்து வெற்றிகண்டதைப் போலவே இலங்கையும் பல கடினமான சவால்களை முறியடித்துள்ளது.

ஆனால், இன்றைய கட்டத்தில் தனது நிலையினை இங்குள்ள வளங்களை வெளி நாடுகளுக்கு வெளிக்காட்ட வேண்டிய தருணத்தில் உள்ளது. பொருளாதார ரீதியாக இலங்கை குறுகிய காலத்தில் நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளது. போருக்கு பின்னர் சில வருடங்களிலேயே இலங்கை பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இப்போதும் மிகவும் வலுவான நிலையில் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதுடன் அதன் முழுமையான வெற்றியை காண் பதற்குரிய சிறப்பான பாதையில் இலங்கை சென்று கொண்டிருக்கின்றது.

பொருளாதார அபிவிருத்தியானது வாழ்க்கையின் மிக முக்கியமான படிக்கற்கள், பொருளாதாரம் வலுவான ரீதியில் வளர்ச்சியடைந்தால் அதன் மூலம் அப்பிரஜைகளுக்கு சிறந்த சேவைகள் பணிகள் உணவு உடை உறையுள் கல்வி போன்றவற்றினை வழங்க முடியும். ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த அனைத்தையும் சிறப்பாக வழங்கி கொண்டிருக்கின்றது. நான் சந்தித்த அரசாங்க அதிகாரிகளும் தமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக உறுதியளித்தனர். பொருளாதார வளர்ச்சியினை நாட்டின் சகல பாகங்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு விசேடமான உட்கட்டமைப்பு நிர்மாணத் திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தில் சகல மக்களும் கலந்து கொள் ளக்கூடிய சந்தர்ப்பங்களை வழங்குவதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கான பாரியளவிலான முதலீட்டை மேற்கொண்டுள்ளது. சகல மாகாணங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்துவது நாட்டின் பாரிய உட்கட்டமைப்பு பெறுபேறாகும். இது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வர்த்தக துறைக்கு இவ்வாறான முன் னேற்றங்களும் இலங்கையின் இயற்கை வளம் வெற்றிகரமான வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. ஒரு நிறுவனம் என்ற ரீதியில் இலங்கையின் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு செய்யக்கிடைத்தமையிட்டு பெருமையடைகின்றோம் என தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com