ரயில் மிதி பலகையில் சென்ற நபர் எதிர் திசையில் வந்த ரயிலில் மோதி பலி!
வெள்ளவத்தை ரொக்ஷி மாடி வீட்டுத்திட்ட பகுதிக்கு முன்னால் இன்று காலை 07.20 அளவில் நடைபெற்ற ரயிலில் மோதுண்டு 27 வயதுடைய விஜேரத்ன நதுகே ரமேஷ் என்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலின் மிதிபலகையில் பயணித்த நபர் கோட்டையில் இருந்து பாணந்துறை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி வீசி எறியப்பட்டு படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரது சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment