எல்.எல்.ஆர்.சி அறிக்கையில் பெரும்பாலனாவை நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது! ஜனாதிபதியின் செயலாளர்
இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு வின் பரிந்துரைகளில் 50 சதவீதமானவை நிறைவேற்றப்பட்டுள் ளதாக உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
எல்.எல்.ஆர்.சி அறிக்கையின் எஞ்சியுள்ள 50 சதவீதமான பரிந்துரைகளை நிறைவேற்ற நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். மிக சிரமமான ஒரு கால கட்டத்தை நாம் கடந்து விட்டோம். மிகுதி வடயங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதன் 5லம் எதிர்கால இலக்குகளை இலகுவாக எட்டமுடியும். எல்.எல்.ஆர்.சி. அறிக்கை மிக பகிரங்க மானது.
எவருக்கும் இது குறித்து கண்டறிய முடியும். இதன் பரிந்துரைகள் நிறைவேற் றப்படும் விதத்தை கண்டறிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக நான் செயற்படுகின்றேன். எமது குழு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக 6 மாதங்களுக்கு ஒரு தடவை சகல தரப்பினரையும் அறிவுறுத்தி வருகின்றோம்.
0 comments :
Post a Comment