Tuesday, November 26, 2013

பிரிட்டனிலுள்ள எல்.ரி.ரி.ஈ சந்தேக நபரை கைது செய்வதற்கு இன்டர்போல் தயாராகி வருகின்றது!

பிரிட்டனில் வசிக்கும் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸான இன்டர்போல் தயாராகி வருகின்றது. அண்மையில் இங்கி லாந்தில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் போது மைதா னத்திற்குள் திடீரென எல்.ரி.ரி.ஈ கொடியுடன் புகுந்த லோ கேஸ்வரன் மணிமாறன் என்பவரை கைது செய்வத ற்கான அபாய எச்சரிக்கையை இன்டர்போல் விடுத்துள்ளது.

இவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் படுவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

போலி கடன் அட்டைகளை பயன்படுத்தி மிகப்பெரிய நிதி மோசடியில் இவர் ஈடுபட்டுள்ளதாக இவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேக நபரான லோகேஸ்வரன் மணிமாறனை கைது செய்யுமாறு கொழும்பு மஜிஸ்திரேட் பிடியாணை பிறப்பித்துள்ளது.

1 comment:

  1. Sri Lankan Goverment should, have a agreements with a all countries, where Tamils are living for getting all Sri Lankan Nations to be deported or overhanded over to Sri Lanka, where thay have been involved in Criminell activities!

    Some of Europien countries, can call back there europien Citizenship if that person have been in a chriminell activities and send back to there own country.

    All Sri lankan Embassiyes
    has to take action on those matters, like those kind of people be deportet back Lanka.

    There are so many Tamil chriminels all over the world.

    ReplyDelete