Friday, November 1, 2013

மன்னார் எரிவாயு கிணறுகள் பற்றி இந்திய நிறுவனம் இலங்கையுடன் பேச்சு!

மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட எரிவாயு கிணறுகள் தொட ர்பாக மதிப்பீடு மற்றும் வர்த்தக ரீதியான கலந்துரையாட ல்களை இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொண்டு வருவ தாகவும் தற்போதைய அகழ்வு பணிகளின் கால எல்லையை 2014 ஆம் ஏப்ரல் வரை இலங்கை அரசாங்கம் நீடித்துள்ளதாகவும் கெய்ன் இந்தியா நிறுவனம் தெரிவித் துள்ளது.

கெய்ன் இந்தியாவின் இரண்டாவது காலாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டு வைத்த போதே கொய்ன் நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

மன்னாரில் எரிபொருள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடும் கெய்ன் லங்கா நிறுவனம் இதுவரையில் நான்கு எரிபொருள் கிணறுகளில் அகழ்வுகள் மேற்கொண்டதுடன் அதில் இரண்டு கிணறுகளில் ஹைதரோகார்பன் எரிவாயுவை கண்டெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

உலகின் 20 பாரிய எரிபொருள் அகழ்வு நிறுவனங்களின் ஒன்றான கெய்ன் இந்தியா 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டுக்கான நிதி அறிக்கையில் தமது நிறுவனம் 749 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் 14 வீத வளர்ச்சியாகும் என தெரிவித்துள்ள நிறுவனம் வரிக்கு பின்னரான நிகர இலாபமாக 545 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அது மட்டுமல்லாது தமது நிறுவனம் திறைசேரிக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது தமது நிறுவனம் நாளாந்தம் 213,299 பீப்பாய் எரிபொருள் உற்பத்தி செய்வதாகவும் இதனை வருட நிறைவுக்குள் 225,000 அதிகரிப்பதே நிறுவனத்தின் இலக்கு என கெய்ன் இந்தியாவின் பணிப்பாளர் இளங்கோ.பி தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com