Friday, November 1, 2013

கட்டுநாயக கடுகதி வீதியூடாக செல்லும் கட்டணம் அறவிடப்படாத மாற்றுப்பாதையை பயன்படுத்துக! பொலிஸார்

வாகன நெரிசலை தடுக்கும் வகையில், நீர்கொழும்பு வீதி யிலிருந்து கண்டி வீதிக்கும், கண்டி வீதியிலிருந்து நீர்கொ ழும்பு வீதிக்கும் பயணம் செய்யக்கூடிய வகையில், கட்டு நாயக கடுகதி வீதியூடாக செல்லும் கட்டணம் அறவிடப் படாத மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு, பொலிஸார் பொது மக்களை கேட்டுள்ளனர்.

கொழும்பு கட்டுநாயக கடுகதி வீதி ஊடாக, கொழும்பு நகரிலிருந்து வெளியேறுவதற்கும், கொழும்பு நகரில் பிரவேசிப்பதற்கும் உள்ள வசதிகள் குறித்து, சாரதிகளுக்கு போதிய தெளிவின்மையினால், புதிய களனி பாலத்திற்கு சமீபமாக தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்படுவதை, அவதானிக்க முடிகிறது. இந்த வாகன நெரிசலில் சிக்காமல், மிக இலகுவாக பயணம் செய் வதற்கு, எந்தவித கட்டணமும் அறவிடப்படுவதில்லையென, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித் துள்ளார்.

இதற்காக, கட்டுநாயக கடுகதி வீதி ஊடாக செல்லும் குறுகிய வீதியை பயன்படுத்துமாறு, பொலிஸார் கேட்டுள்ளனர். உழவு இயந்திரங்கள் போன்ற வாகன ங்கள், முச்சக்கர வண்டிகள், சைக்கிள்கள், மாட்டு வண்டிகளுக்கு இவ்வீதியை பயன்படுத்த முடியாதென, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment