Friday, November 29, 2013

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2014 ஆண்டு வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டதன்மூலம் 99 மேலதிக வாக்குக்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் 22ஆம் திகதி முதல் கடந்த ஏழு நாட்களாக வரவு-செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றிருந்தது.

இன்றைய விவாக்களிப்பில் வரவு செலவுத்திட்டத்திற்கு எதராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் வாக்களித்திருந்தன.

இதேவேளை வரவு செலவு திட்டம் மிதான குழுநிலை விவாதம் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்று அன்றைய தினம் மாலை இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com