பொது மன்னிப்பை பயன்படுத்தி நூற்றுக்கு 90 வீதமானோர் நாடு திரும்பினர்!
சவூதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலப்பகுதியில் நூற்றுக்கு 90 வீதமானோர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரி வித்துள்ளார். பொது மன்னிப்பு காலம் மற்றும் கொரிய வேலைவாய்ப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கும் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித் துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் சவூதியில் நிர்க்கதியடைந்திருந்த அதிகமானோர் கடந்த 2 வருடங்களில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் அத்துடன் காப்பகங் களில் வருடாந்தம் தஞ்சமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
ஏனெனில் அதிகமானோர் இந்நாடுகளுக்கு வேலைவாய்ப்பை பெற்று செல்வதாகும். பாதுகாப்பகங்களில் இருப்போரைவிட நலன்புரி நிலையங்களில் இருப்போர் தொடர்பாகவே நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். அவர்களை பாது காப்பாக இலங்கைக்கு அல்லது காப்பகங்களுக்கு அழைத்து வருவதே எமது நோக்கமாகும் எனவும் காப்பகங்களில் இருப்போருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை அவர்கள் இலங்கை தூதரின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment