Thursday, November 21, 2013

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 68ஆவது வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 68ஆவது வரவு – செலவுத் திட்டமான 2014 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் ஒன்பதாவது வரவு – செலவுத் திட்டம் இதுவென ஆளுங்கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள், புதிய வருமான மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் உள்ளிட்ட பல யோசனைகள் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனை தொடரந்து வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 2014ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டவர்கள் இலங்கையில் குத்தகை அடிப்படையில் மாத்திரம் காணிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்ததுடன் இதற்காக 15% ஆரம்ப வரி அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து விவசாய ஓய்வூதிய திட்டத்தை 2014 ஜனவரி தொடக்கம் செயற்படுத்துமாறு யோசனை முன்வைக்கிறேன் எனக்குறிப்பிட்டதுடன் 63 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு 1250 ரூபா வீதம் விவசாய ஓய்வூதியம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் 2014 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறை 5.2 வீதமாகவும், 2016ஆம் ஆண்டு 3.8 வீதமாகவும் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போஜனாதிபதி தெரிவித்தார்.

மேலதிக தகவல்கள் http://www.ilankainet.com/2013/11/blog-post_8338.html

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com