உலகின் சுபீட்சமான நாடுகளின் சுட்டெண் தொடர்பில் லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் லகடான் நிறுவனம் 142 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இலங்கைக்கு 60ஆம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந் ஆய்வின் அடிப்படையில் இந்தியா 106ஆம் இடத்தையும், நேபாளம் 102ஆம் இடத்தையும், பங்களாதேஷ் 103 இடத்தையும் வகிக்கின்றது.
இந்த கணிப்பீடு ஆனது தலா தேசிய வருமானம், மொத்த தேசிய சேமிப்பு, தொழில்வாய்ப்பு, உணவு இருப்பிட வசதி போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையிலேயே கணிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது.
உலகின் சுபீட்சமான நாடுகளின் தர வரிசையில் முதலாம் இடத்தை நோர்வேயும், இரண்டாம் இடத்தை சுவிட்சர்லாந்து, மூன்றாம் இடத்தை கனடாவும் பெற்றுக் கொண்டுள்ளன.
No comments:
Post a Comment