அனுராதபுர படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!
அநுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ வீரரொருவர் கைது செய்யப்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப் படும் இன்னுமிருவர் தொடர்பிலான முக்கியமான தக வல்கள் வெளியாகி யுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
வீடொன்றில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் ஐவரது சடலங்களை பொலிஸார் மீட்டெடுத்தனர். அநுராதபுரம், விஹார ஹல்மில்ல குளம் பிரதேச த்தில் நேற்றுக் காலை இந்தக் கொடூர கொலைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கடுமையான வெட்டுக் காயங்களுடன் பாதிக்கப்பட்ட மற்று மொரு நபர் அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களு மான ஐவரே சடலமாக மீட்டெடுக் கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
41 வயதுடைய தாயாரான குசுமலதா, அவரின் 61 வயதுடைய சகோதரி மற்றும் அவரது மகன், குசுமலதா வின் 13 வயதுடைய மகள், 23 வயதுடைய உதய குமார் என்ற மகன், ஆகியவர்களே இந்தச் சம்பவத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் அந்தப் பிரதேசத்தில் நேற்றுக் காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment