Monday, November 4, 2013

53 நாடுகளின் கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மாணவ கலாசார பேரணி! (படங்கள் இணைப்பு)

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள 53 நாடுகளின் கலாசாரத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் பாடசாலை மாணவர்களுடைய பேரணியின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார். நேற்று (3.11.2013) ஞாயிறு மாலை கொழும்பு ரோயல் பார்க்கில் "நாளை நமதே" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கலாசார பேரணியில் 3750 மாணவர்கள் பங்குபற்றியதுடன் சுதந்திர சதுக்கம் வரை சென்று முடிவடைந்தது.

இந்தப் பேரணியில் நீர்கொழும்பு நிவ்ஸ்டீட் மகளீர் பாடசாலை பிரித்தானியா வையும், கொழும்பு ஆனந்த பாலிகா வித்தியாலயம் இந்தியாவையும், குருநாகலை மல்லியதேவ ஆண்கள் பாடசாலை அவுஸ்திரேலியாவையும், நாரம்மல மயுரபாத மத்திய கல்லூரி தென் ஆப்பிரிக்காவையும் பிரதிநிதித்துப்படுத்தின.

கல்வி அமைச்சு சுயாதீன தொலைக்காட்சியுடன் இணைந்து இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்ததுடன் இப்பேரணியில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பி னர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பொதுநலவாய நாடுகளின் ராஜதந்திரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment