அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA ) உலகெங்கிலும் உள்ள இரகசிய தகவல்களை இரகசியமாக திரட்டிக்கொள் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணனி வலையமைப்புக்களுக்குள் ஊடுருவி மல்வேர்களை நிறுவியுள்ளது என அமெரிக்காவை கதிகலங்க செய்துள்ள எட்வேர்ட் ஸ்நோடன் புதிய ஆதாரத்தினை வெளியிட்டுள்ளார்.
இந்த செயற்பாடு தொடர்பான உலக வரைபடத்தினை பவர்பொயின்ட் பிரசன்டேசன் வடிவில் கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து NSA சேகரித்து வைத்துள்ளது என்ற தகவலை தற்போது டச்சு செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இதே வேளை இந்த நிறுவனம் இந்தச்செய்தியை வெளியிட்டதுடன் மட்டும் நின்றுவிடாது சில கேள்விகளையும் தொடுத்துள்ளது எனினும் இந்தநிறுவனத்தின் கேள்விகளுக்கு அமெரிக்கா அரசு மௌனம் காத்துவருகின்றது.
No comments:
Post a Comment