500 வெளிநாட்டு, 500 உள்ளுர் முதலீட்டார்களை, இலக்கு வைத்து பொதுநலவாய வர்த்தக மாநாடு இன்று ஆரம்பம்!
பொதுநலவாய வர்த்தக மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக 67 நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னணி முதலீட்டாளர்கள் பங்கேற்கவுள்ளனர். பொதுநலவாய வர்த்தக மாநாடு இன்று கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் ஆரம்பமாகவு ள்ளது. இம்மாநாட்டில் ஆயிரத்து 370 வெளிநாட்டு முதலீட் டாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
உலகின் 650 முன்னணி முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இதில் அடங்குவதாக வர்த்தக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது. ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவை செலுத்தி, தமது பெயர்களை பதிவு செய்ததன் பின்னரே இவர்கள் இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டனர். இதன் பிரகாரம் பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்காத 14 நாடுகளின் பிரதிநிதிகளும் இம்மா நாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
730 உள்நாட்டு வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டார்கள் இம்மா நாட்டை பிரதிநிதித்து வப்படுத்திகின்றனர். பொதுநலவாய மாநாட்டில் அங்கம் வகிக்காத அமெரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம், சீனா, ஸ்பெயின்,பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களும் இப்பேரவையில் பங்கேற்கின் றனர். பிரிட்டனிலிருந்து 143 பேரும் சீனாவில் இருந்து 120 பேரும் பங்கேற்பது குறிப்பிடத்தக்க அம்சம் என பொதுநலவாய வர்த்தக பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் நில்ரூஸ பீரிஸ் தெரிவித்தார்.
பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டின் வர்த்தக பேரவை சினமன் கிரேன் ஹோட்டலில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 500 வெளிநாட்டு முதலீட்டாளர்களையும்; 500 உள்ளுர் முதலீட்டாளர்களையும் இலக்கு வைத்தே இம்மாநாட்டை நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம்.
தற்போது 650 வெளிநாட்டு முதலீட்டாளர்களும் 700 உள்நாட்டு முதலீட்டாளர்களும் இதில் பங்கேற்கின்றனர். நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட எமது இலக்கு வெற்றி பெற்றுள்ளது. இதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். தகவல் தொழில்நுட்பம், துறைமுகம், விமான உட்கட்டமைப்பு , கல்வி, உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான துறைகளை சேர்ந்த முதலீட்டாளர்களும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இலங்கை முதலீட்டு சபை கிட்டத்தட்ட 50 இற்கும் மேற்பட்ட திட்டங்களை இம்முதலீட்டுக்காக தயார்ப்படுத்தியுள்ளது. 65 நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் இதில் பங்கேற்கின்ற்னர். இது இலங்கை பெற்ற வெற்றியாகும். இதன் மூலம் இலங்கையின் முதலீட்டாளர்கள் தமது உற்பத்திகளை சர்வதேசத்திற்கு பறை சாற்றுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான நேரடி முதலீட்டை இதன் மூலம் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
0 comments :
Post a Comment