வாடகை பணத்தை செலுத்தவில்லை! செனல்- 4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
செனல்- 4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக கொழும்பு-02 கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய் யப்பட்டுள்ளது. செனல்4 ஊடகவியலாளர்களை அநுராதபு ரத்தில் இருந்து கொழும்பு அழைத்து வந்த வான் சாரதி செனல்-4 ஊடகவியலாளர்கள் தனது வேனுக்குரிய வாடகை பணத்தை செலுத்தவில்லை என தெரிவித்து கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய் துள்ளார்.
வாடகை பணமான 30 ஆயிரம் ரூபாவை கொடுக்கவில்லை என்றே அந்த முறைப் பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து ரயிலில் வவுனியா சென்ற செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு அநுராதபுரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனால் அநுராதபுரத்தில் இருந்து செனல் 4 ஊடகவியலாளர்கள் வேனில் கொழும்பு நோக்கிச் சென்றனர். நேற்று இரவு தம்புள்ளையில் தங்கியிருந்த இவர்கள் இன்று காலையே கொழும்பு வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
2 comments :
Once again they prove, they are the no 1 robber in the world
Well known that British are well robber! See - what kind of man this Callom Mcre??????
CRIMINELL!
Post a Comment