சனல் 4 ஊடகவியலாளர் ஜனாதிபதியை நெருங்கிச் சென்றது எப்படி? விசாரணைக்கு உத்தரவு!
பொதுநலவாய மாநாட்டு செய்திகளைச் சேகரிப்பதற்காக வந்துள்ள சனல்4 ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நெருங்கிச் சென்று அவரிடம் கேள்விகளை கேட்டது எவ்வாறு என்பதையிட்டு விசாரணை நடப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பொதுநலவாய மாநாட்டு வணிக அரங்கத்தை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காரில் ஏற முயன்றபோது ஜனாதிபதிக்கு அருகில் சென்ற செனல் 4 ஊடகவியலாளர் கேள்விகளை எழுப்பினார்.
சனல் 4 செய்தியாளர் ஜொனாத்தன் மில்லர், படைகள் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மகிந்த ராஜபக்ச, இவையெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகள் என்றும், அதைப்பற்றித் தாம் கவலைப்படவில்லை என்றும் கூறினார்.
தன்னை சனல் 4 ஊடகவியலாளர் என்று ஜொனாத்தன் மில்லர் அறிமுகப்படுத்திக் கொண்டு கேள்விகளை எழுப்பிய போது, தேனீர் விருந்துக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்து விட்டு வாகனத்தை நோக்கிச் சென்றார்.
அப்போதும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மாநாட்டைப் புறக்கணிப்பது குறித்து ஜொனாத்தன் மில்லர் கேள்வி எழுப்பினார். அதற்கும் பதிலளிக்காமல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது காரில் ஏறிச்சென்று விட்டார்
3 comments :
Sri Lankan People know.what is Channel 4 and why thay are in Sri Lanka. Camaron also on same cattegary, therfor thay all wants to visit Jaffna , due to there agreements With LTTE and LTTE diasporas in UK.
Jonathan Miller,you have done enough damages to our country.What else you nees.Why not you go to syria,the country which is in a pathetic state of sufferings as the western backed
rebels play havoc
You basterds! Howe many sivilians killed by your British people 50 yeras ago??????????
Where is this criminell bastred your friend Collem Mcre??? Where he was ?? Thos thausans of sivilians killd by British basterds in Sri Lanka and In India???????
Post a Comment