செனல்4 பணிப்பாளர் இலங்கை வருகின்றார்! இலங்கை விஜயத்தின் பின் அவரது நிலைப்பாட்டில் மாற்றம் உண்டாகும்!
செனல்4 ஊடகத்தின் பணிப்பாளர் மக்ரேயுடன் மொத்தமாக 30 ஊடகவியலாளர்கள் பிரித்தானியாவின் சார்பில் பொது நலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர் எனவும் கலம் மக்ரேக்கு வீசா வழங்குவதில் இலங்கைக்கு எவ்வித சிக்கல்களும் கிடையாது என அமைச் சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிடுவதன் மூலம், இலங்கை தொடர்பான அவரது நிலைப்பாட்டில் மாற்றம் உண்டாகும் எனவும், நம்பிக்கை தெரிவித்த ரம்புக்வெல்ல எவ்வாறெனினும் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு ஆவணப்படத்தை தயாரிக்க செனல்4 ஊடகம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடுமென அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதனை முறியடிக்கத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் ஊடகவியலாளர் குழுவுடன் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்க்கது
2 comments :
Callom Mcre is a person, who have been controlled by LTTE diasporas in UK, Hes visit to Sri Lanka, can be make some differant self opinions after the visit, but LTTE UK diasporas not allow him to publice any good leagale News,which is good for S.L country.
Thay will pay more and more to Channel 4, like to Pillai
Nothing like trying,but the out come of his visit will be really hard to
predict
Post a Comment