Tuesday, November 12, 2013

48 மில்லியன் அமெரிக்கர்களுக்கு உணவு நிதியுதவி வெட்டப்படுகிறது. அமெரிக்காவில் சமத்துவமின்மையும் அரசியல் வெற்றிடமும்!

BY .Andre Damon
வெள்ளியன்று அமெரிக்கக் காங்கிரசிலிருந்து எவ்வித நடவடிக்கை இல்லாமல், 48 மில்லியன் அமெரிக்கர் களுடைய உணவு நிதியுதவி வெட்டப்பட்டுவிட்டன. இது முதல்முதலான நாடுதழுவிய உணவு முத்திரை கொடுப்பனவு வெட்டாகும். இந்த வெட்டுக்கள் மொத்தம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 11 பில்லியன் டாலர்களாக இருக்கும். மூன்று பேர் உள்ள குடும்பத்திற்கு ஆண்டொன்றிற்கு 300 டாலருக்கு மேல் இருக்கும். இது மில்லியன் கணக்கான சிறுவர்கள், இளம்தாய்மார்கள், வயதானோர் மற்றும் உடலியலாத மக்களை பட்டினிக்குள் தள்ளுதலாகும்.

காங்கிரஸ் தற்பொழுது உணவு முத்திரைகளில் இன்னும் வெட்டுக்கள் குறித்து விவாதிக்கிறது. ஜனநாயக, குடியரசுக் கட்சியினர் மிக பாதிக்கப்பட்டோருக்கு வழங்கும் மிககுறைந்த உதவியில் இன்னும் எவ்வளவு அகற்றப்படலாம் என்பதை பற்றி விவாதிக்கின்றனர்.

இதற்கிடையில் முக்கிய அரச உதவித் திட்டங்களுக்கு மேல் 26 வார வெட்டுக்காலத்திற்குப்பின் வேலையற்றோருக்கு உதவிகளை வழங்கும் அரச அவசரக்கால வேலையின்மை இழப்பீட்டுத்திட்டம் டிசம்பர் மாதம் முடிவடையும் கட்டத்தில் உள்ளது. அனைத்து வேலை செய்வோருக்கும் மக்கள் விகிதத்திற்கும் உள்ள புள்ளிவிவரங்கள் மூலம் அளவிடப்படும் உண்மையான வேலையின்மை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் கணிசமான மாற்றத்தைக் காட்டாத நிலையில் மாநிலங்கள் நாடு முழுவதும் ஏற்கனவே நலன்களை வெட்டத்தொடங்கிவிட்டது.

வறுமை, வேலையின்மை, பொருளாதாரப் பாதுகாப்பின்மை ஆகியவை மக்களில் பெரும்பாலனவர்களுக்கு அன்றாட யதார்த்தமாகிவிட்டது. ஓர் மதிப்பீட்டின்படி, ஐந்து அமெரிக்கர்களில் நான்கு பேர் கிட்டத்தட்ட வறுமைநிலையில் வாழ்ந்துள்ளனர், வேலையின்மையில் இருந்துள்ளர், அல்லது அவர்கள் வாழ்வில் ஓராண்டு அதற்கும் மேலாக பொதுநல உதவிகளை பயன்படுத்தியுள்ளனர்.

உணவு உதவியில் வெட்டு என்பது உத்தியோகபூர்வ அமெரிக்க அரசியலில் ஒரு அர்த்தமற்ற நிகழ்வாகியுள்ளது. இது பற்றி செய்தி ஊடகத்தில் அதிகம் குறிப்பிடப்படப்படாததுடன், எப்பொழுதாவது சாதாரண அறிக்கை ஒன்றுதான் இதுபற்றி வரும். எந்த முக்கிய அரசியல் நபரும் இவ்வாறு நடக்காதிருக்க ஏதாவது செய்யவேண்டும் என கூறவில்லை. ஜனாதிபதி பாரக் ஒபாமா இதைப்பற்றி ஒன்றும் கூறாதது மக்களின் இடர் குறித்து உண்மையில் அவருடைய பொருட்படுத்தாத்தன்மையை மட்டும் கூறுவது மட்டுமல்லாது, அவருடைய நிர்வாகம் மற்றும் முழு அரசியல் அமைப்புமுறையின் சமூகப் பார்வையையும் பிரதிபலிக்கிறது.

இங்கு நாம் குறிப்பிடத்தக்க வகையில் அமெரிக்காவில் இருக்கும் பரந்த அரசியல் வெற்றிடத்தின் தெளிவான வெளிப்பாட்டைத்தான் காண்கிறோம். அரசியல் அமைப்புமுறை மக்களுடைய அடிப்படைத் தேவைகளை பொறுப்பேற்காததுடன் அவற்றிற்கு முற்றிலும் விரோதப்போக்கையும் கொண்டுள்ளது.

தொடர்ச்சியான பல சமீபத்தியக் கருத்துக் கணிப்புக்கள் ஒபாமா மற்றும் அரசியல் ஆளும்தட்டு முழுவதில் இருந்தும் மக்கள் ஒதுங்கிநிற்பது அதிகமாகிவிட்டது என்பதைக் காட்டுகின்றன. ஒபாமாவிற்கான ஆதரவு விகிதம் மிக குறைந்த 42% எனச் சரிந்துள்ளது. கடந்த வாரம் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல்/என்பிசி-WSJ/NBC கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டதில் இது தெரிய வருகிறது. அதில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்கள் அவருடைய முதலாவது ஜனாதிபதி பதவிக்காலத்தில் இருந்ததை விட தற்போதைய நிர்வாகத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்த எண்ணிக்கையை தோற்றுவிக்க பல வேறு கூறுபாடுகள் இணைந்துள்ளன என்பதில் ஐயமில்லை. பாரிய சட்டவிரோத, அரசியலமைப்பு விரோத பொலிஸ் அரசாங்க உளவு குறித்த வெளிப்பாடுகள் நிர்வாகத்தினதும் மற்றும் அதன் உயர்மட்ட உளவுத்துறை தலைவர்கள் மீண்டும் மீண்டும் கூறியுள்ள பொய்களைத்தான் அம்பலப்படுத்தியுள்ளன. தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் தகவல் வெளிப்படுத்தியவரான எட்வார்ட் ஸ்னோவ்டென் உடைய சமீபத்திய வெளிப்பாடு, அரசாங்கம் கூகுள் மற்றும் யாகூவின் உள் தகவல்கள் முழுவதையும் நகல் எடுக்கிறது மற்றும் டஜன் கணக்கான உலகத் தலைவர்கள் மீது உளவு நடத்துகிறது என்பவை அமெரிக்க ஜனநாயகத்தின் இற்றுப்போன தன்மையை வலியுறுத்தத்தான் உதவுகின்றன.

இயலுமான பாதுகாப்புச் சட்டம் ―Affordable Care Act― என்பது பெருநிறுவனங்களுக்கு வழங்கும் ஓர் கொடுப்பனவு என ஒவ்வொரு நாளும் அம்பலப்படுத்தப்படுவதும் கணிசமான பாதிப்பைக் கொடுத்துள்ளது. மக்களுக்குத் தன் உடல்நலப்பாதுகாப்புத் திட்ட்டங்களை முன்வைக்கையில் ஒபாமா பலமுறை “உங்கள் உடல்நல பாதுகாப்பு திட்டத்தை நீங்கள் விரும்பினால், உங்கள் உடல்நல பாதுகாப்புத் திட்டத்தையும் நீங்கள் தக்கவைத்துக் கொள்ளுவீர்கள்.” என்று வலியுறுத்தினார். இப்பொழுது மில்லியன் கணக்கான மக்கள் தற்போது இருக்கும் திட்டங்களில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர், ஒபாமா தன் முந்தைய உறுதிமொழிகள் அப்பட்டமாக மாறுவது ஒரு பிரச்சினை இல்லை என்று கருதுகிறார்.

இதுவும் தவறு நிறைந்து, திறமையற்ற முறையில் வெளியிடப்பட்டுள்ள திட்டத்தின் வலைத் தளமும் திட்டத்தின் அடிப்படைத் தன்மையையே வெளிப்படுத்திக் காட்டுகின்றது. ஆரம்பத்தில் இருந்து இவை மக்களுக்கு உடல்நல பாதுகாப்பை வழங்கும் வழிவகையாக இருக்கவில்லை, மாறாக அதற்கு எதிர்மாறாகவே உள்ளது. காப்புறுதி நிறுவனங்களுக்கு இது பெரும் உதவித்தொகை ஆகும். அத்துடன் உடல்நலப்பாதுகாப்பு முறையின்மீது அவற்றின் கட்டுப்பாட்டை அதிகப்படுத்துகிறது. பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் செலவுகளைக் குறைக்கும் வகையில் தங்கள் திட்டங்களை அகற்றி தொழிலாளர்களை தனியார் சந்தையில் காப்புறுதிகளை வாங்கக் கட்டாயப்படுத்தும் வாய்ப்பு ஆகும். நிர்வாகத்தின் முக்கிய உள்நாட்டு “சீர்திருத்த” ஆரம்ப முயற்சி மாபெரும் மோசடி ஆகும்.

ஒபாமா நிர்வாகம் மீதான பெருகும் அதிருப்தியைத் தவிர, கருத்துக் கணிப்புக்கள் பொது விரோதப் போக்கையும் காட்டுகின்றன. குடியரசுக் கட்சியினருக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் தீவிரமாக சரிந்துள்ளன. WSJ/NBC கருத்துக்கணிப்பின்படி, மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் இரு கட்சிகளில் எத்துடனும் இல்லை என்று கூறியுள்ளனர். Gallup இன் படி ஒரு மூன்றாம் கட்சிக்கான ஆதரவு மிக அதிகளவிற்கு உயர்ந்துள்ளது. இப்புள்ளிவிரங்கள் மத்திய அரசாக மூடலின் விளைவின் ஒரு பகுதியும் கூட. அது தொழிலாள வர்க்கத்தின்மீது இன்னும் தாக்குதல்களுக்கான சூழலைத் தோற்றுவிக்க நடத்தப்பட்டது.

ஒபாமாவிற்கும் அவருடைய முன்னோடி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிற்கும் கருத்துக்கணிப்பு புள்ளிவிவரங்களுக்கு இடையே உள்ள இணைய நிலைகள் வியத்தகுமுறையிலும் கணிசமாகவும் உள்ளன. ஒரு முந்தைய கால கருத்துக்கணிப்பின்படி ஒபாமாவின் தற்போதைய ஆதரவு விகிதம் 0.6% தான் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷுடையதைவிட அவருடைய ஜனாதிபதிக் காலத்தில் இதே நேரத்தில் 2005 இலையுதிர்காலத்தில் இருந்தது. இது நிர்வாகத்தின் பொறுப்பற்ற, பொருட்படுத்தாத, திறமையற்ற முறையில் அமெரிக்க வரலாற்றில் பெரும் அழிவுகளில் ஒன்றான காத்தரீனா புயலுக்குப் பிந்தைய நிகழ்வுகளை தொடந்து ஏற்பட்டது.

“நம்பிக்கை” மற்றும் “மாற்றத்தின்” வேட்பாளர் என ஜனநாயகக் கட்சியின் தாராளவாத மற்றும் போலி இடது ஆதரவாளர்களால் பாராட்டப்பட்டு “மாற்றம் கொண்டுவரும்” ஜனாதிபதி என்றும் கூறப்பட்டவர் வங்கிகள் மற்றும் இராணுவ உளவு அமைப்புகளின் உறுதியான பிரதிநிதியாகவும், நம்ப முடியாமல் பொய்கூறுபவர் என்றும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளார்.

தற்காலிக அமெரிக்க வரலாற்றிலேயே மிகச் செல்வாக்கற்ற ஜனாதிபதி என்ற நிலையில் பதவியை விட்டு விலகிய புஷ்ஷிற்கு எதிரான பாரிய மக்கள் எதிர்ப்பு அலையை தொடர்ந்து, ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளை வேறுவிதமாக காட்டும் முயற்சிக்கு ஒபாமா முன்னுக்குக் கொண்டுவரப்பட்டார். ஆயினும் ஒபாமா பெருமந்த நிலைக்குப்பின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தலைமை தாங்கி, அரசாங்கம் டிரில்லியன் கணக்கான டாலர்களை வங்கிகளுக்குக் கொடுத்தவகையில் எதிர்கொண்டது. அத்துடன் பெரும்பாலான மக்களுடைய ஊதியங்கள் சரிந்தன, பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டது.

இதில் பிரச்சினை ஒரு நபரோ நிர்வாகமோ அல்ல, முழு இற்றுப்போன அரசியல் அமைப்புமுறையும்தான். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த பதினைந்து ஆண்டு அனுபவத்தில் இருந்து பொதுவான கருத்துக்களை எடுத்துக் கொள்ளுவது முக்கியம் ஆகும் புஷ், ஒபாமா நிர்வாகங்களின் கொள்கைகளின் அடிப்படைத் தொடர்ச்சி என்பது இருவருமே ஆளும் வர்க்கத்தினதும் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையை பாதுகாப்போரின் பிரதிநிதிகள் என்ற உண்மையிலிருந்து வருகின்றது.

ஒரு பெரு வணிக அரசியல்வாதிக்குப் பதிலாக மற்றொரு அரசியல்வாதியை இருத்துவது பயனைத்தராது. வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை என்ற நவீன சமூகத்தை சூழ்ந்துள்ள நிலைமையை அகற்றுவதற்கு ஒரே வழி, பெரும் செல்வந்தர்களுக்கு செழிப்பை வளர்ப்பதற்கு என்று இல்லாமல், சோசலிச வேலைத்திட்டத்தில் ஆயுதபாணியாக்கப்பட்டு, சமூகத் தேவைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியை கட்டமைப்பதாகும்.

No comments:

Post a Comment