Thursday, November 21, 2013

தினமும் 40 சிகரெட்களை ஊதித் தள்ளும் சிறுவனுக்கு மறுவாழ்வு சிகிச்சை..!

தினமும் 40 சிகரெட் ஊதித் தள்ளிய சிறுவனுக்கு தற்போது மறுவாழ்வு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகி றது.இந்தோனேஷியாவைச் சேர்ந்த மீன் வியாபாரி முக மது 30 இவரது மனைவி டயானா 26; இவர்களது குழந்தை ஆல்தி ரிஜால் 4.இரண்டு வயதிலிருந்தே புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டான். தற்போது 40 சிகரெ ட்டுகளை புகைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளான்.

இத்தகவலை அறிந்த இந்தோனேஷிய அரசு குழந்தையின் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த சிறப்பு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கத் துவங்கியது. இதற்காக குழந்தை ஆல்தி, தலைநகர் ஜகார்தாவுக்கு அனுப்பப்பட்டுள்ளான். அங்கு அவனுக்கு விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு புகைக்கும் பழக்கத்தை மறக்கடிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தோனேஷியாவில் பத்து வயதிற்கு கீழ் உள்ள மூன்றில் ஒருவர், சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.இந்தப் பிரச்னையை சமாளிப்பதற்கு, அந் நாட்டு அரசு பல்வேறு முறைகளில் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment