Friday, November 15, 2013

தண்டவாளத்தை கடக்க முற்பட்ட 40 யானைகளில் 6 யானை பலி!

தண்டவாளத்தை கடக்க முற்பட்ட 40 யானைகள் ரயிலில் மோதுண்டதில் 6 யானைகள் சம்பவ இடத்திலேயே இறந்த சம்பவமொன்று கொல்கத்தாவில் நடைபெற்றுள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் இருந்து 55 கி.மீ தூரத்தில் உள்ளது சல்சா வனப்பகுதி வழியாக நேற்று மாலை 5.45 மணிக்கு 40 யானைகள் சென்று கொண்டிருந்தன. அப்போது அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அசாமின் திப்ருகருக்கு விரைவு ரயில் ஒன்று கடந்து சென்றுள்ளது.

எதிர்பாராத விதமாக ரயில் வந்த வேளையில் யானைகள் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளன இதில், ரயில் மோதி 6 யானைகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளன. விபத்தில் சிக்கி மேலும் பல யானைகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

விபத்து குறித்து தகவலரிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன் காயமடைந்த யானைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அதிகாரிகள் உடனடியாக மேற்கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com