பண்டாரவளை பூனாகலை வீதியில் அனர்த்தம்! பஸ் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து! 11 பேர் பலி
பண்டாரவளையிலிருந்து பூணாகலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி பண்டாரவளை பூனாகலை வீதியில் 9ம் கட்டை மாபிட்டிய பகுதியில சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 11 பேர் பலியானதுடன் 26 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தார்.
காலநிலை சீர்கேடு மற்றும் பள்ளத்தின் நிலைமையை கவனத்தில் கொள்ளும் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் காயமடைந்தவர்களை தேடிக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் தியத்தலாவை வைத்தியசாலையிலும் பதுளை வைத்தியசாலையில் 7 பேரும் பெண்கள், 3ஆண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 8 பேரின் சடலங்கள் பண்டாரவளை வைத்திய சாலையிலும் 2 பேரின் சடலங்கள் தியத்தலாவை வைத்திய சாலையிலும் வைக்கப் பட்டுள்ளன.பண்டா ரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment